பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தி ல்ஒரு சதுர அடியை கூட நாம் விட்டுக் கொடுக்க கூடாது! டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஜூன் 27-
நாட்டில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

700 மாணவர்கள் கல்வி பயின்று வரும் இந்த பள்ளிக்கு இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

பள்ளியின் அருகில் கட்டப்படும் வீடமைப்பு திட்டத்திற்கு வழிவிடும் வகையில் பள்ளியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ள முயற்சிகள் அரங்கேற்றம் கண்டு வருகிறது.

ஒரு போதும் இந்த பள்ளியின் நிலத்தை நாம் விட்டுக் கொடுக்க கூடாது என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்காலத் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

இன்று பள்ளியின் ஒரு பகுதியை எடுத்து கொள்வார்கள். பின்னர் பள்ளியின் முழு நிலமும் கேட்பார்கள்.

பல ஆண்டுகளாக இங்கு தமிழ்ப் பள்ளி இருப்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அப்படியிருக்க பள்ளியின் அருகில் வீடமைப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கி இன்று வீடமைப்பு திட்டத்தின் சாலை விரிவாக்கத்திற்கு பள்ளியின் நிலத்தை அபகறிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் சிலாங்கூர் மாநில அரசு இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருபோதும் தமிழ்ப் பள்ளி நிலத்தில் கை வைக்க வேண்டாம். சாலை விரிவாக்கத்திற்கு மாற்று நிலத்தை தேடுவது சரியான வழியாகும் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles