பொதுமக்கள் ஜாக்கிரத்தை!!! தொலைப்பேசி ஸ்கோமில் சிக்க வேண்டாம்- பேராக் போலீஸ்படை தலைவர்

ப்போ, ஜுன். 28: தைப்பிங்கில 72 வயது முதியவர் தொலைபேசி ஸ்கோமில் சிக்கி தமது 177,700 ரிங்கிட்டை இழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட முதியவர் போலீஸ் புகார் ஒன்றை கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக இம்மாதம் 27 ல் செய்துள்ளதாக பேராக் போலீஸ்படை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி முகமட் ஹாசான் பஸ்ரி கூறினார்.

இம்மாதம் 12 ல், மதியம் 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபரால் தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் அந்த சந்தேகபேர்வழி தாம் தொடர்புத்துறை பல்லூடக அமைச்சின் அதிகாரி என்று தம் அறிமுகம் செய்துள்ளார்.

பின் தங்கள் வங்கி கணக்கில் சட்டவிரோதமாக பணத்தை சேர்த்து வைத்துள்ளீர்கள். இவ்விவகாரம் தொடர்பாக ஈப்போ மாவட்ட காவல் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கும்படி பணித்துள்ளார்.

அதற்கு உடந்தையாக அருகில் போலீஸ் அதிகாரி( சந்தேகப்பேர்வழி 2) அந்த முதியவரிடம் மிரட்டல் பாணியில் பேசியுள்ளார். இருப்பினும், அந்த முதியவர் தாம் சட்டவிரோதமாக எந்த செயலிலும் ஈடுபட்டது கிடையாது. ஆகவே, ஈப்போ மாவட்ட காவல் நிலையத்திற்கு போக மறுத்துள்ளார்.

இந்த போலீஸ் அதிகாரி தங்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று முதல் சந்தேகப் பேர்வழி இரண்டாவது பேர்வழியிடம் பேசும்படி கூறியுள்ளர். தங்களின் ஏதிஎம் வங்கி அட்டை எண் மற்றும் வங்கி கணக்கின் பின்( pin) நம்பரை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த முதியவரும் அவருக்கு தம் வங்கி எண்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு இந்த முதியவர் இந்த சந்தேகப்பேர்வழிகளை தொடர்புக்கொண்டபோது அழைப்பு கிடைக்கவில்லை. அதற்கு வங்கிக்கு சென்று தம் வங்கி கணக்கை பார்த்தபோது 5 முறை வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது, அதாவது 177,700 ரிங்கிட் என்று அறியப்படுகிறது.

இம்மாதிரியான அழைப்புகள் வந்தால் தடுமாற வேண்டாம். போலீஸ் உதவியை நாடவும். அரசாங்க ஏஜென்சியை நேரடியாக சென்று காண முற்படலாம். அதோடு, யாரிடமும் வங்கி கணக்கு எண்களை அல்லது பின் நம்பரை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார் பேராக் போலீஸ்படை தலைவர். டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles