பேங்க் ரக்யாட் வாயிலாக 43 பேருக்கு 38 லட்சம் வெள்ளி கடனுதவி: டத்தோ ரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர்: ஜூன் 28-
பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 43 பேருக்கு 38 லட்சம் வெள்ளி கடனுதவி வழங்கப்பட்டது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த பிரிவ்-ஐ திட்டம் கடந்த ஜூன் 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

ஜூன் 27ஆம் தேதி வரை 1,000 த்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது இத்திட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஆதரவாக நான் பார்க்கிறேன்.

அவ்வகையில் முதல் கட்டமாக 43 பேரின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 38 லட்சம் வெள்ளி இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles