

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜூன் 28-
மலேசியாவுக்கு வருகை புரிந்திருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் இன்று மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக உலக நாயகன கமல்ஹாசன் இன்று மலேசியா வந்தார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் என்யூ செண்டரில் படத்தின் பிரச்சார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் உரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கு பின் உலக நாயகன் கமல்ஹாசன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தார்.
அரசியல், சினிமா உட்பட பல விவகாரங்கள் குறித்து இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.
மஇகாவின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

