
செபராங் ஜெயா: jun 30-
தெக்குனின் இலக்கு முழுமையாக அடைந்தால் நிதியை உயர்த்தவும் நான் தயார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கில் தெக்குன் தொடங்கப்பட்டது.
தற்போது பல்வேறு திட்டங்களின் வாயிலாக தொழில் முனைவர்களுக்கு தெக்குன் உதவிகளை செய்து வருகிறது.
கடனுதவி என்றாலும் வணிகர்களுக்கு தெக்குன் பெரும் பயனாக உள்ளது.
ஆகையால் தெக்குன் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
அப்படி இலக்கை முறையாக அடையும் பட்சத்தில் தெக்குனுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவும் நான் தயாராக உள்ளேன். இதில் நான் உறுதியாக உள்ளேன் என்று செபராங் ஜெயாவில் நடந்த மடானி தெக்குன் விழாவில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார் இதனை கூறினார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக், துணையமைச்சர் டத்தோ ரமணன் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
bernama

