


கோலாலம்பூர் ஜூன் 30-
கின்ராரா தமிழ்ப்பள்ளி யில் ஒரு சொங்கலை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்தார்.
இன்று பள்ளியின் மண்டபத்தில் பள்ளி வாரியம் ஏற்பாடு செய்த விளக்க கூட்டத்தில் பிரபாகரன் கலந்து கொண்டார்.
முதல் கட்டத்தில் பள்ளி வாரியம் கொடுத்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள பொதுமக்கள் மறுத்து விட்டனர்.
சாலை விரிவாக்கத்திற்கு பள்ளி நிலம் பறிபோகிறதா? உங்கள் முடிவு என்ன என்பதை பதில் செல்லுங்கள் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காரசாரமாக கேள்வி எழுப்பினர்.
இதனால் இக்கூட்டத்தில் பெரும் சலசலப்பு மற்றும் வாக்குவாதம் முற்றியது.
பாடாங் செராய் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், டத்தோ கலைவாணர், பூச்சோங் முரளி, பூச்சோங் தமிழ் அரசன் டத்தோ எஸ்.பதி உட்பட பலரும் கேள்வியை எழுப்பி டிபிகேஎல் நிறுவனத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் நடந்ததை கூறும் படி வலியுறுத்தினர்.
பின்னர் பள்ளியின் வாரியத் தலைவர் விளக்கம் அளித்தபோது ஒரு கட்டத்தில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் எழுந்து விளக்கம் அளித்தார்.
மேம்பாட்டு நிறுவனம் சாலை விரிவாக்கத்திற்கு 4 லைன் தேவைப்படுவதாக கூறுகிறது.
ஆனால் பள்ளியில் இருந்து ஒரு செங்காலை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று என்றார்.
இது என்னுடைய தொகுதி இல்லை என்றாலும் ஒரு தமிழன் என்ற உணர்வில் இந்த பள்ளிக்கு வந்து இருக்கிறேன்.
இப்போது எல்லாம் பேச்சுவார்த்தையில் மட்டுமே உள்ளது.
ஆகவே இந்த பள்ளி விவகாரத்தில் தாம் நேரடியாக களம் இறங்கி இருப்பதாக அவர் சொன்னார்.

