
புதுடெல்லி: “விலைமதிப்பில்லாத பிறந்தநாள் பரிசை எனக்கு அளித்ததற்கு நன்றி” என்று இந்திய அணி உலகக் கோப்பை வென்றது குறித்து முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்துள்ள வாழ்த்தில், “என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது. ஆனால் இந்திய வீரர்கள் நிதானமாக, தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடி வெற்றி பெற்றுவிட்டனர்.
உலகக் கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டுவருவதற்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சார்பில் நன்றி. மேலும், விலைமதிப்பில்லாத இந்த பிறந்தநாள் பரிசை எனக்கு அளித்ததற்கு நன்றி” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

