
திருமலை: வாரவிடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரிப்பது வழக்கம். அப்போது பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இதேபோல் நேற்று வாரவிடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. நேற்று ஒரேநாளில் 80,404 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 35,825 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.83 கோடி காணிக்கை செலுத்தினர்.

