
ஃபோர்ட் கிள்ளான் ஜூன் 31-
ஃபோர்ட் கிள்ளான் வட்டாரத்தில் உள்ள தாமான் கெம்பீரா விளையாட்டு திடலில் தொலை தொடர்பு கோபுரம் அமைக்க குடியிருப்பாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இங்கு தொலை தொடர்பு கோபுரம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்துள்ளன.
ஆனால் இங்கு தொலை தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் ஓளிர்கதீர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தாமான் கெம்பீரா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் சூரியா தெரிவித்தார்.
இந்த திடலை ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் படுத்தி வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு தொலை தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று அவர் சொன்னார்.
தொலை தொடர்பு கோபுரம் அமைக்க திடலில் தூண்களை நடும் திட்டத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.
கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் யுவராஜா தாமான் கெம்பீரா திடலுக்கு வந்து இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார் என்று டாக்டர் சுரேந்திரன் கூறினார்.

