10ஏ பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேசனில் பயில இடம்!பிரதமரின் அறிவிப்பை வரவேற்றார் சிவகுமார்

கோலாலம்பூர் ஜூன் 31-
இனம் பாராமல் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு!
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பை பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ சிவகுமார் பெரிதும் வரவேற்றார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறமையை அங்கீகரிப்பதிலும், அதே நேரத்தில் தேசிய கல்வி முறையில் நீதி வழங்குவதிலும் அரசின் துணிச்சலான முடிவு குறித்த விவரங்களை கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக்கிற்கு தெரிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த இந்த செய்தி அனைத்து இன மாணவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சிவகுமார் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 10ஏ பெற்ற இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷனில் பயில இடம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

ஆனால் பிரதமரின் இந்த அறிவிப்பால் இனி இது போன்ற பிரச்சினைகளை நமது இந்திய மாணவர்கள் எதிர்நோக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles