
நிபோங் திபால் , ஜூலை 6-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பினாங்கு மாநில சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் ஜோஹாரி அரிபினும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அபிடின் இஸ்மாயிலும் போட்டியிட்டனர்.
இதில் பெரிக்கத்தான் நேஷனலுக்கு 14,554 வாக்குகள் கிடைத்தன.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு 10,0285 வாக்குகள் கிடைத்தன.
சுங்கைப் பாக்காப் தொகுதி சட்டமன்ற தொகுதியை மீண்டும் பெரிக்கத்தான் நேஷனல் தக்க வைத்துள்ளது.

