
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர்,ஜூலை 7-
ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட அசோஜன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர்.
இந்த முறை ம.இ.காவின் உதவித்தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. உதவித் தலைவருக்கான மூன்று இடங்களுக்கு முறையே டத்தோ எம்.அசோஜன் 8633 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது நிலையில் டத்தோ முருகையா 8566 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாவது நிலையில் 8338 வாக்குகள் பெற்று டத்தோ நெல்சன் ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
ம.இ.கா உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட நால்வரில் நடப்பு உதவித்தலைவராக இருந்த டத்தோ டி.மோகன் 8280 வாக்குகள் பெற்றுள்ளார்.
நடைபெற்ற கடும் போட்டியில் டத்தோ டி. மோகன் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டார்.
மஇகா உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நாடு தழுவிய நிலையில் நடைபெற்றது.
பல மணி நேரம் வாக்குகள் எண்ணப்பட்டு முதல் கட்டமாக உதவித் தலைவருக்கான முடிவுகள் இன்று அதிகாலையில் அறிவிக்கப்பட்டது.
மஇகாவின் தேசியத் தலைவரும் தேர்தல் குழு தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனுமதியுடன் டத்தோ செல்வ மூக்கையா தேசிய உதவி தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.

