
சென்னை: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை அண்ணாமலை தொடர்ந்து விதைத்து வருவதாக ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் மோடி, நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால்தான் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாமலையின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது. அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

