
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார்.
நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனால் காதுபகுதியில் காயம் அடைந்த டிரம்ப்பினை பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரினை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் பலியானார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “எனது நண்பரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன்.
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட உலகத் தலைவர்கள் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.

