
சுங்கை சிப்புட், ஜுலை. 14: பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான வளர் தமிழ் விழா ஈவூட் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியை பேராக் மாநில கல்விதுணைக்களம் மற்றும் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், உலு பேராக், கோலகங்சார் மாவட்ட தமிழ்ப்பள்ளிளுக்கு நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன்.
24 வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடந்தேறியதற்கு இந்நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன், இந்நிகழ்விற்காக 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக எஸ்.கேசவன் தெரிவித்தார்.
மாணவர்களின் படைப்பு மிகவும் சிறப்பாக இருந்ததோடு பொற்றோர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது.
முனைவர் சாமிக்கண்ணு ஜெயமணி உருவாக்கிய இந்த வளர்தமிழ் விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்கேற்ப பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி யில் ஹரிசாந்தி ராஜன் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, சுபாநாகஸ்ரீ நாகராஜன் பேச்சுப்போட்டி, சிவநேஸ்வரர் சதிஸ் கவிதைப் போட்டியில் வெற்றி வாகை சூடினார்கள்.
.

