சிலாங்கூர் அன்பு இதயம் சங்கத்தின்அன்னையர் – தந்தையர் தின விழா விமர்சையாக நடைபெற்றது!

அம்பாங், ஜூலை 14-
சிலாங்கூர் அன்பு இதயம் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று அம்பாங் இண்டா சமூக மண்டபத்தில் அன்னையர் மற்றும் தந்தையர் தின விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

சிலாங்கூர் அன்பு இதயம் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரபல மருத்துவர் டாக்டர் திரு அவர்கள் பலருக்கு இலவசமாக மெடிக்கல் வசூச்சரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட அன்னையர் மற்றும் தந்தையர் களுக்கு அன்பளிப்புகளும வழங்கப்பட்டது.

நாடாறிந்த சமூக சேவையாளர் செந்தூல் விஜி, சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ சிவா, தட்சனா, ஏஎஸ்பி முத்தையா அம்பாங், டத்தோ குணாஜி, சிவமலர் உட்பட பலரும் இந்த விழாவில் சிறப்பு செய்யப்பட்டனர்.

ஓவ்வொரு ஆண்டும் சிலாங்கூர் அன்பு இதயம் சங்கத்தின் ஏற்பாட்டில் அன்னையர் தந்தையர்களின் தியாகங்களை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அன்பளிப்புகள் வழங்கப்படுவதாக கணேசன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles