குயில் ஜெயபக்தி நிறுவனம்தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றி வரும்!டத்தோ டாக்டர் கு செல்வராஜ் பெருமிதம்

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஜூலை 15-
பல்வேறு சவால்கள் இருந்தாலும் மலேசிய திருநாட்டில் குயில் ஜெயபக்தி நிறுவனம் தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றி வரும் என்று அதன் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.

இந்தியர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதை தடுக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் குயில் ஜெயபக்தி நிறுவனம் புத்தக கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வரும் என்றார்.

ஓவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு குயில் ஜெயபக்தி நிறுவனம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை வாசிப்பு மாதத்தை முன்னெடுத்துள்ளது.

ஜூலை மாதத்தை வாசிப்பு மாதமாக தேசிய நூலகம் அறிவித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

அந்த அடிப்படையில் குயில் ஜெயபக்தி நிறுவனம் மக்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாண்டும் புத்தக கண்காட்சியின் மூலம் இந்த திட்டத்தை முன் எடுத்து வருகிறது என்றார்.

இந்தியர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவது பெரும் வேதனையை அளிக்கிறது.

இதனை நிவார்த்தி செய்யும் வகையில் குயில் ஜெயபக்தி நிறுவனம் பல சவால்களுக்கு மத்தியில் புத்தக கண்காட்சியை நடத்துகிறது.

அண்மையில் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற அனைத்துலக புத்தக கண்காட்சியில் குயில் ஜெயபக்தி நிறுவனம் பங்கேற்றது.

இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெறும் ஒரே தமிழ் புத்தக நிறுவனம் குயில் ஜெயபக்தி மட்டுமே என்று அவர் சொன்னார்.

மலேசியாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருப்பதால் மொழி அழிந்து விடாமல் இருக்க குயில் ஜெயபக்தி நிறுவனம் தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றி வரும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி பார்வகி கலந்து கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles