
கோலாலம்பூர் ஜூலை 16.
லண்டன் அறிவு கட்டளையின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் நடைப்பெற்று வரும் கம்பன் விழாவில்
“செந்தமிழ்ச் செல்வர் விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்ட டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த விழாவில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் முதல் நாள் பேருரை ஆற்றினார்.
மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய மேம்பாடு, தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும் அவர் தனதுரையில் விளக்கினார்.
மேலும்,தொடர்ச்சியாக இரண்டாவது நாள் நடைபெற்ற விழாவில், டத்தோஸ்ரீ எம். சரவணனுக்குச் ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மலேசியா மட்டும் இல்லாமல் உலக நாடுகள் மத்தியில் இலக்கியம் , தமிழ் மொழி, தமிழ் சார்ந்த முன்னேற்றத்திற்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழுக்காக எடுத்து வரும் முயற்சியைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ஆதரவளித்து வருவதோடு
ஒரு சிறப்பு பிரமுகராக மட்டும் கலந்து கொள்ளாமல், இலக்கியப் பேருரை ஆற்றி மலேசியத் தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்குப் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆதரவு கொடுத்து வருவதோடு மட்டுமின்றி சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களுக்கு லண்டன் மாநகரில் ‘செந்தமிழ்ச் செல்வர் ‘விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதற்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அச்சங்கம் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டது.

