
சித்தியவான், ஜூலை16: தனித்தமிழ் தந்தையென போற்றப்படும் மறைமலையடிகள் அவர்களின் வாழ்வையும் தமிழ்மொழிக்கான அவரது புகழையும் மெய்ப்பிக்கும் வகையில் தனித்தமிழ் தந்தையின் வரலாற்றுச் சுவடுகள் நூல் வெளியீடு நனிச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தியர் நலப் பிரிவு சிறப்பு அதிகாரி மதிப்புமி கோ.தினகரன் தலைமையேற்கும் இந்நூல் வெளியீடு சுங்கை. வாங்கி தோட்டம் அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது என அதன் தலைவர் தமிழ்த்திரு சுப.கதிரவன் தெரிவித்தார்.
வருகின்றன ஜூலை திங்கள் 20ஆம் நாள் காரிக்கிழமை (சனி) சித்தியவான் சித்தர் குடில் ஆன்மீக இல்லத்தில் மாலை மணி 7.00க்கு நடைபெறவுள்ளது.
இந்நூல் வெளியீடுக்கு மறைமலையடிகள் அவர்களின் பெயரனும் நூலாசிரியருமான மறை.தி.தாயுமானவன் அவர்களும் கலந்து கொள்ளும் வேளையில் நூல் அறிமுகத்தை எழுத்தாளர் இராதை சுப்பையா வழங்குகிறார்.
மேலும்,இந்நூல் வெளியோடுக்கு டத்தோ சத்தியபாலா முன்னிலை வகிக்கும் நிலையில் தமிழ்த்திரு.சு.கிருட்டிணன் வாழ்த்துரையும் வழங்குகிறார் என்பதையும் சுப.கதிரவன் குறிப்பிட்டார்.
இந்நூல் வெளியீடுக்கு எழுத்தாளர்களும்,ஆசிரியர்களும்,தலைமையாசிரியர்களும்,தமிழ் ஆர்வலர்களும் திரளாக கலந்து கொள்ளும் வேளையில் டத்தோ டாக்டர் உ.புவனேசுவரன் நூலை வெளியீடு செய்ய திரு.சு.மகேஸ்வரன்,திரு.மு.புவனேஸ்வரன் மற்றும் திரு.ம.மனோகரன் ஆகியோர் முறையே முதல் மூன்று நூல்களை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஏற்பாடு குழு தலைவர் தமிழ்த்திரு.சுப.கதிரவனை 60 12-557 3357 எண்ணில் அழைத்து விளக்கம் பெறலாம்.

