
கோலாலம்பூர், ஜூலை 18 – சமூக ஊடக கணக்குகளில் பொது மக்கள் வெளியிடும் கருத்துகளை முடக்கும்படி ஊடகத் துறையினருக்கு தாம் உத்தரவிடவில்லை என்ற தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
கருத்துகளைத் தடுப்பது உள்பட தங்கள் தளங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமை ஊடக நிறுவனங்களுக்கு உள்ளதாக அவர் சொன்னார்.
இணைய ஊடகம் ஒன்றின் வாசகர் கருத்து தொடர்பில் கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிப்புமிகு உறுப்பினர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
வாசகர்கள் வெளியிடும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்ட ஊடகத் தளங்களே பொறுப்பு என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. ஆகவே, கருத்துப் பதிவிடல் தொடர்பில் நாம் எச்சரிக்கைப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்
பெர்னாமா

