
கோலாலம்பூர் ஜூலை 19-
எம்ஏசிசி எனப்படும் மலேசிய லஞ்ச ஒழிப்புத் ஆணையம் விசாரணைக்கு வழிவிடும் வகையில் தற்காலிகமாக விடுமுறையில் செல்கிறேன் என்று எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் ஹமீது அறிவித்துள்ளார்.
எச்ஆர்டி கோர்ப் தொடர்பான தேசிய கணக்காய்வாளர் அறிக்கை, பொதுக் கணக்கு குழுவின் அறிக்கை ஆகியவை தொடர்பாக எம்ஏசிசியும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விசாரணைகளுக்கு வழிவிடும் வகையில் தாமாகவே முன்வந்து விடுமுறையில் செல்கிறேன்.
இன்று ஜூலை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் என் விடுமுறை தொடங்குகிறது.
நான் விடுமுறையில் இருந்தாலும் எச்ஆர்டி கோர்ப் வழக்கம்போல் இயங்கும். எந்த ஒரு பணியிலும் சேவையிலும் தடங்கல் இருக்காது.
இத்தனை நாட்கள் எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றி என்று டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் கூறினார்.

