
கோலாலம்பூர் ஜூலை 18-
ஈகோ செராஸ் அப்பர்மெண்ட் குடியிருப்பில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட புக்கிட் அமான் போதை பொருள் துடைத்தொழிப்பு போலீசார் அங்கு போதை பொருள் உற்பத்தி செய்யும் கிடங்கை அம்பலப்படுத்தினார்.
இந்த குடியிருப்பில் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்மணியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வீட்டில் இருந்து 44.931 கிலோ கிராம் கொய்கோய்னை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் செராஸ் தாமான் கஸ்தூரி தியாராவில் வீடு ஒன்றை முற்றுகைற்ற போலீசார் ஆடவரை கைது செய்து 90 லட்சம் மதிப்புள்ள 44.93 கிலோ கிராம் கொக்கோய்னை பறிமுதல் செய்தனர்.
ஒட்டுமொத்தமாக இந்த அதிரடி சோதனையில் 92 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவு இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
போதைப்பொருள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட பல வகையான பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்திருப்பதாக அவர் சொன்னார்.

