கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது: சசிகலா இணைப்பு குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்

அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது என்று ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோன்றது.

அதிகாரம் கையில் இருந்தபோது சசிகலா தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்ததில்லை. அதிமுகவினர் தற்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் என்று கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles