துப்பாக்கியால் சுட்டு டிரம்பை கொல்ல முயன்ற விவகாரம்; ஈரான் மறுப்பு

நியூயார்க்: ஈரானின் துணை ராணுவ படை தளபதி காசிம் சுலைமானியை அப்போதைய டிரம்ப் அரசு ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்ததற்கு பழிவாங்குவதற்காக அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரான் துணை ராணுவத்தின் சிறப்பு அதிரடி படை பிரிவு தளபதியாக இருந்தவர் காசிம் சுலைமானி. அந்நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.

இவர், ஈராக் சென்றிருந்தபோது, அவரை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கடந்த 2020, ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதில் சுலைமானி உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் நாசர் கனானி கூறியதாவது: அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் எங்கள் நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதுபோல், தளபதி காசிம் சுலைமானி படுகொலைக்கு பழிவாங்குவதற்காக டிரம்ப்பை கொல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதும் தவறான தகவல்.

சுலைமானி படுகொலையை பொருத்தவரை, அதற்கு நேரடி தொடர்புடைய டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக சட்டபூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துதான் பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles