அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 200 கோட்டங்களிலும், அரசு மருத்துவமனையிலும் கடந்த ஆட்சி காலத்தில் 388 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டது. இந்த உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை மக்களுக்கு பயனளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.

இந்த உணவகங்களின் மூலம் தினசரி 1.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறறு வருகின்றனர். ஓர் ஆண்டில் 4 கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன

தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வபோது நேரில் ஆய்வுசெய்து, தேவையான உதவிகளை செய்து தரும்படி அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles