வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: 105 பேர் பலி; நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை குவித்தது.

வங்கதேசத்தில் அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

வன்முறை வெடித்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை குவித்துள்ளது.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles