
கோலாலம்பூர் ஜூலை 20-
ஜிஞ்சாங் செலாத்தான் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் தேதி 68 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.
நாளை காலை 6.00 மணிக்கு மேல் சிறப்பு பூசைக்கு பின்னர் பக்தர்கள் பால் குடங்கள் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.
அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜைக்கு பின் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் பரிமாறப்படும்.
இரவு 7.00 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகர் மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகர்களாக வலம் வரும் செந்தில் – ராஜலெட்சுமி தம்பதியர், ரோக் பாடகர் மகாலிங்கம், சரிகம புகழ் பாடகி ஷாமளா ஆகியோர் பங்கேற்கும் நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் ஆலய ஆடித் திருவிழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய நிர்வாகத்தினர் அன்போடு கேட்டுக் கொள்கிறார்கள்

