
பினாங்கு, ஜூலை 21-
வெளிநாட்டு சமையல்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இல்லாவிடில் நாட்டில் பல உணவுகள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
வெளிநாட்டு சமையல் காரர்கள் உள்ளூர் உணவுகளை சமைப்பதால் அது சுவையாக இல்லை என்று வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
பினாங்கு மாநிலத்தில் வெளிநாட்டு சமையல் காரர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 வகையான உள்ளூர் உணவுகளை வெளிநாட்டு சமையல்காரர்கள் சமைப்பதற்கு தடை செய்வதில் பினாங்கு மாநிலம் முன்னணி வகிக்கும் என்ற உண்மை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது.
2014 இல் இந்த தடை அமலுக்கு வந்தபோது பினாங்கு மாநகர் மன்றந்திற்கு சொந்தமான அங்காடி கடைகளில் மட்டுமே அமலில் இருந்தது.
ஆனால் இப்போது அனைத்து ஊராட்சி மன்றங்கள் அல்லது பினாங்கு மாநாகர் மன்றத்தின் லைசென்ஸ் பெற்ற பகுதிகளில் இந்த தடை விரிவுபடுத்தப்பட வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்புடையதாக இல்லை என்று அவர் சொன்னார்

