எக்ஸ்-ல் 10 கோடி ஃபாலோயர்கள்; பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அவரது எக்ஸ் பக்கத்தில் 100.1 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியுள்ளது.

இதையடுத்து எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதமர் மோடி,எக்ஸ் தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், “உலகில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர் ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles