இணையப் பகடிவதையால் ஏற்படும் மரணங்களை பார்க்க விரும்பவில்லை! போலிஸ்படைத் தலைவர் எச்சரிக்கை

கோலாலம்பூர்: ஜூலை 21-
நாட்டில் இணையப் பகடிவதைக்கான போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் அறிவித்தார்.

இணையப் பகடிவதைக்கான நடவடிக்கைகளை போலிஸ் கண்காணித்து வருகிறது.

இணையப் பகடிவதைக்கு இலக்காகி பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பல குற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.

நூர் ஃபரா கார்தினி அப்துல்லாவின் கொலை வழக்கில் இணைய அச்சுறுத்தலின் கூறுகள் கண்டறியப்பட்டன.

மேலும் ஈஷா அல்லது ராஜேஸ்வரி மரணத்துடன் தொடர்புடைய சமீபத்திய இணையப் பகடிவதை சம்பவம், பிரச்சினையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈஷா வழக்கில், 44 வயது ஆணும் 35 வயது பெண்ணும் தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இணையப் பகடிவதையால் ஏற்படும் மரணங்களை இனி பார்க்க விரும்பவில்லை.

இது ஒரு விளையாட்டு அல்ல. இது பாதிக்கப்பட்டவரின் உணர்ச்சிகளைப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles