மதுபான நிறுவனங்களின் நன்கொடைக்கு தடைவிதிப்பது ஏற்புடையது அல்ல!!

மதுபான நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறுவதை எதிர்க்கும் தரப்பினர் சற்று நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கேட்டுகொண்டார்.

அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சலே நாட்டில் உள்ள சீன பள்ளிகளுக்கு மதுபான நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையால் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் அந்த நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற கல்வி அமைச்சு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அதே போன்று மஇகாவின் இளைஞர் அமைப்பான புத்ரா பிரிவின் தலைவர் சதிஸ் குமார் சங்கர் அந்த நிறுவங்களிடம் இருந்து நன்கொடை பெற அரங்கம் அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தவதும் ஒரு முதிர்ச்சியான செயல் இல்லை என குறிப்பிட்ட அவர்.

அந்த நிறுவனங்களின் சமூக கடப்பாட்டை இன விவகாரமாக அல்லது அரசியல் சாயம் பூசுவதை நிறுத்த வேண்டும் என அனைத்து தரப்புற்கும் வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்த திரு சந்திர சேகரன்,அந்த நிறுவனங்களின் லாப ஈவு வருமானத்தில் இருந்து தான் கொடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், அப்படி அந்த நிதியை புறக்கணித்தால் இழப்பு மாணவ சமுதாயத்திற்கே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதோடு,

அந்த நிறுவங்களின் இருந்து வரும் வருமான வரியை ஏற்று கொள்ளும் பக்குவம் கொண்ட நாம் அந்த நிறுவனத்தின் நிதி உதவியை மட்டும் தடைவிதிக்க வலியுறுத்துவது எந்த வகையில் ஏற்புடையது ஆகாது என கல்வியாளருமான திரு சந்திர சேகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles