போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இருந்து இரு இந்திய இளைஞர்கள் விடுதலை

ஈப்போ ஜூலை 26-
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இரு இந்திய ஆடவர்கள் அக்குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 6..8. 2018 இல் காலை 11 மணியளவில் லோரோங் கிளேடாங் திமோர் 16 , தாமான் இசுடின் , ஈப்போ எனும் இடத்தில் போதைப் பொருள் வைத்திருந்ததாக விஸ்வேஸ்வர் சுகுமாரன் ( வயது 28), லதீஸ்வரன் வேலு( வயது 27) ஆகிய இருவர் மீது குற்றச்சாட்டு ஈப்போ உயர் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது.

இவர்களுக்கு எதிராக 39 பி ( பிரிவு 1), 39ஏ( பிரிவு 2) ஆகிய பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முதல் குற்றச்சாட்டில் 4.76 எடைக்கொண்டு எரோயின் மற்றும் மோர்பின் ரக போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் , இரண்டாவது குற்றச்சாட்டில் 225. 5 கிராம் மெத்தம்மெத்தமின் எடைக்கொண்ட போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இந்த வழக்கில் இந்த இரு ஆடவர்கள மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சை நிருபிக்க அரச தரப்பினர் போதிய ஆதாரத்தை நிருபிக்க தவறியதால் அந்த குற்றச்சாட்டிலிருந்து இவர்களை விடுவிப்பதாக நீதிபதி சூ தியாங் ஜூ அறிவித்தார்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் நாதன்கிருஷ்ணன், ரஜிட் கில் ஆகிய இருவரும் மற்றும் அரசு தரப்பில் கீதா .ஜோரா சிங் ஆகியோர் ஆஜராயினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles