33ஆவது ஒலிம்பிக் போட்டி: பாரிசில் இன்று கோலாகல தொடக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வண்ணமயமான தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் இன்றிரவு கோலாகலமாகத் தொடங்குகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டியின் 33ஆவது தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது.

மலேசியா, இந்தியா உட்பட 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டித் தொடரில் கால்பந்து, ஹாக்கி, தடளன் என 32 வகை விளையாட்டுகள் நடைபெற்றுள்ளன.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழாவில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு அரங்கத்தில் இல்லாமல், பாரிஸ் நகரின் புகழ் பெற்ற ‘சென்’ ஆற்றில் நடைபெற உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles