ரவாங் தாமான் பெர்டானா ஜேகேஆர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 46 ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா!

மா.பவளச்செல்வன்

ரவாங் ஜூலை 26-
ரவாங் தாமான் பெர்டானாவில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஜே கே ஆர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 46 ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா வரும் ஜூலை 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது.

காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிற்பகல் 12.00 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜை நடைபெறும்.

பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும்.

கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த நடராஜா சகுந்தலா தம்பதியினர் அன்னதானம் உபயத்தை ஏற்று கொண்டுள்ளனர்.

செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங், ரவாங் வட்டார சமூக சேவையாளர் டத்தோ சுரேஸ் ராவ் உட்பட பலரும் இந்த திருவிழாவில் சிறப்புப் பிரமுகர்களாக கலந்து கொள்கிறார்கள்.

மாலையில் பக்தர்கள் ஆற்றங்கரையில் இருந்து பால் குடங்கள் காவடிகள் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.

சுற்று வட்டார மக்கள் பெருமளவில் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஆலய நிர்வாகம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles