
பிறை ஜூலை 30-
பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதி சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஜூலை 28 ஆம் தேதி பிறை உத்தாமாவில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 412 பேர் கலந்து கொண்டு நன்மை அடைந்தனர்.
பிறை எம்பிபிகே நடத்திய நிகழ்வில் மிகப்பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டது பெரும் உச்சகத்தை அளிக்கிறது என்று பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ மற்றும் பிறை கவுன்சிலர் பொன்னுத்துரை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு வெற்றி பெற பெரும் உதவி புரிந்த அனைவருக்கும் ஸ்ரீ சங்கர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

