என்னையும் என் குடும்பத்தாரையும் களங்கம் ஏற்படுத்தும் தரப்பினர் மீது வழக்கு தொடுப்பேன் ! மாரான் மரத்தாண்டவர் ஆலய செயலாளர் முனைவர் ஜெயந்திரன் எச்சரிக்கை

மாரான் ஜூலை 31-
நாட்டில் புகழ்பெற்ற மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாக விவகாரத்தில் தாம் நடுநிலை வகிப்பதாக ஆலயச் செயலாளர் முனைவர் ஜெ.ஜெயந்திரன் இன்று தெரிவித்தார்.

ஆலய நிர்வாகத் தேர்தலில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

இது, இரு தரப்பினருக்கிடையிலான தலைமைத்துவ போராக இருக்கின்ற நிலையில், முடிவான தீர்ப்பு வரும் வரை எந்தத் தரப்புக்கும் சார்பாக செயல்பட போவதில்லை.

ஆலயத்தின் நன்மையையும் சீரான நிர்வாகத்தையும் கருதி, எல்லா சூழலிலும் நான் நடுநிலை வகிக்க விரும்புகிறேன்.

ஆலயத்தின் செயலாளர் என்ற முறையில் நிர்வாகம் மற்றும் ஆவணங்கள் சம்பந்தமாக பேச விரும்பினால், என் வழக்கறிஞர் மூலமாக கடிதம் வழி அணுகினால் நான் ஒத்துழைப்பு நல்கத் தயாராக இருக்கிறேன்.

எந்தச் சர்ச்சையிலும் தில்லுமுல்லுகளிலும் சம்பந்தப்படாத என்னையும் என் குடும்பத்தாரையும் வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தும் தரப்பினர் மீது நான் மான நஷ்ட வழக்கு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

அண்மையில் எனக்கு மிரட்டல் விடுத்து, என் மீது அபாண்டமாக பழி சுமத்திய சிலர் மீதும் என் வழக்கறிஞர் மூலமாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன்.

ஆகவே என் மீது அவதூறாக சாடுவதையும், அபாண்டமாக பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்துவதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என முனைவர் ஜெ.ஜெயந்திரன் ஓர் அறிக்கை வழி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles