
கோலாலம்பூர், ஆக 3- புக்கிட் ஜாலில், அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நடைபெற இருக்கும் பாலஸ்தீன விடுதலைப் பேரணியில் பங்கேற்க பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
அனைவரும் திரண்டு வாருங்கள், பாலஸ்தீன விடுதலைப் பேரணியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனா அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறார் என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலையை கண்டிப்பதற்கும் பாலஸ்தீனத்திற்கு பிளவுபடாத ஆதரவைப் புலப் படுத்துவதற்கும் அந்த பேரணி நடத்தப்படுவதாக பிரதமர் நேற்று கூறியிருந்தார்.

