
பெட்டாலிங் ஜெயா:
நேற்றிரவு புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா அரங்கில் நடந்த பாலஸ்தீனத்திற்கான ஆதரவு பேரணியில் உரையாற்றியப் போது ‘இஸ்ரேல் வாழ்க’ என்று தவறாக சொன்னதற்காக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த போது இந்தத் தவறு நிகழ்ந்துள்ளதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது ஆதரவு எப்போதும் பாலஸ்தீனர்களுக்குத் தான் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள மன்னிப்பு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஜாஹித் இஸ்ரேல் வாழ்க என்று கூறும் காணொலி வைராலானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மையை வலுவாக நிராகரிப்பதற்கும், அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றிற்கான குரல் கொடுப்பதற்காகவும் நேற்று இரவு அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய கினி

