
சிங்கப்பூர், ஆக 5-
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியான் ரோபோட்டிக் மற்றும் ட்ரோன் போட்டியில் கிள்ளான் மிட்லன்ட்ஸ் தமிழ்பள்ளி் மாணவர்கள் களந்து கொண்டனர்.
இதில் மிட்லன்டஸ் தமிழ்பள்ளி மாணவர்களான நுதனன் ஜீவா மற்றும் மகேந்திரன் மதியழகன் இருவரும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
ஆசியான் ரீதியில் இந்த போட்டியில் பல மாணவர்கள் கலந்து கொண்ட வேலையில் மிட்லன்டஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்தது சாதனையாகும் என்று பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்.டி. சரவணன் தெரிவித்தார்.

இந்த வெற்றிக்கு உறுதுனையாக இருந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், தலைமை ஆசிரியர் கோவிந்தன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
மாணவர்கள் சிங்கப்பூர் செல்ல நிதி உதவி அளித்த மிட்லன்ட்ஸ் தோட்ட ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் அனைவருக்கும் நன்றி என்று அவர் சொன்னார்.

