
சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 66.15 கோடி மதிப்பிலான 58 புதிய (பி.எஸ்-6) தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண (பி.எஸ்-6) பேருந்துகள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக ஏறி செல்லும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களை இப்பேருந்துகள் கொண்டுள்ளன.

