கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை : இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரிக்கை

லண்டன்:வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் உள்ள நடன பள்ளியில் உள்ள 3 சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். கடந்த வாரம் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவன் அகதியாக இங்கிலாந்தில் குடியேறிவன் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவின.

இதையடுத்து தீவிர வலது சாரி குழுக்கள் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். சவுத்போர்ட், லீவர்பூல், லண்டன் ஆகிய இடங்களில் ஆர்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து மூத்த அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் ஆலோசனை நடத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles