லெபனான் நிலவரத்தை அரசு கண்காணிக்கிறது-  தூதரகத்துடன் தொடர்பில் இருக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து!

புத்ராஜெயா, ஆக 6 – லெபனானின் சமீபத்திய  நிலவரங்களை வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அணுக்கமாகக் கவனித்து வருகிறது.

லெபனானின் திப்னின் மற்றும் மரக்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய அமைதி காக்கும் படை (மல்பாட்) 850-11 மற்றும் அந்நாட்டிலுள்ள இதர மலேசியர்களின்  பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு பெய்ரூட்டில் உள்ள மலேசிய தூதரகமும் மலேசிய பாதுகாப்பு அமைச்சும்  ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரமாகத் தொடர்பு கொண்டு வருகின்றன என்று தெரிவித்தது.

இன்றுவரை தெற்கு லெபனானில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை என்றும்  இருப்பினும், நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளதாகவும் விஸ்மா புத்ரா கூறியது.

லெபனானில்  தொடர்ந்து தங்கியிருக்க விரும்பும் மல்பாட் படையில்   அல்லாத அனைத்து மலேசியர்களும் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் அதேவேளையில்  உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அது வலியுறுத்தியது.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles