
எம்.பவளச்செல்வம்
கோலாலம்பூர் ஆக 7-
செனட்டர் சிவராஜ் மீண்டும் மஇகாவில் இணைகிறார் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ள வேளையில் அவருக்கு முக்கிய பதவியும் வழங்கப்படுகிறது என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
ம இகா முன்னாள் இளைஞர் அணி தலைவராக இருந்த டத்தோ சிவராஜ் பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறினார்.
இப்போது மீண்டும் அவரை ம இகா அரவணைத்துள்ளது என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
இன்று பிற்பகலில் நடைபெறும் ம இகா மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு டத்தோ சிவராஜூக்கு முக்கிய பொறுப்புக்கு முக்கிய பதவி வழங்கப்படும் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

