செமினி, புரோகா பாலாவ் தோட்ட பாட்டாளிகளின் பிரச்சனைக்கு விடிவுகாலம்!ஒவ்வொரு பாட்டாளிக்கும் தலா 50 ஆயிரம் வெள்ளி இழப்பீடு

செ.வே.முத்தமிழ்மன்னன்

செமினி, ஆக 7-
செமினி புரோகா பாலாவ் தோட்டத்தில் வாழ்ந்த ஐந்து முன்னாள் தோட்டப் பாட்டாளிகளின் பிரச்சனைகளுக்கு இன்று நல்ல முறையில் தீர்வு பிறந்தது.

ஐந்து தோட்டப் பாட்டாளி க்கு தலா 40,000 வெள்ளியும் வாடகை வீட்டில் குடியிருக்க 10,000 வெள்ளி என்று மொத்தமாக 50,000 வெள்ளி இழப்பீடாக வழங்கப்படுகிறது.

மேலும் இவர்களுக்கு சிலாங்கூர் கூ வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது, ஜாலான் புரோகா கம்போங் முனியாண்டியாகத் திகழும்
இப்பகுதியில் சமிக்ஞை விளக்கைப் பொருத்துவதற்கு Boustead Balau மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்விடத்தை விட்டு காலி செய்யும்படி இந்நிறுவனம் குடியிருப்பாளர்களுக்கு நோட்டிஸ் கொடுத்துள்ளது.

முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஐந்து குடும்பங்களுக்கும் தலா 18,800 வெள்ளி வழங்குவதாக மேம்பாட்டு நிறுவனம் முன்வந்தது. இதில் 18 மாத வாடகையும் 3 மாத முன் பணமும் அடங்கும்.

ஆனால்
சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அனைவரும் உரிய இழப்பீடு கோரி கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து போராடி வருகின்றனர்

இந்நிலையில் பிகேஆர் உலு லங்காட் தொகுதி தலைவரும் உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான ராஜன் முனுசாமி மற்றும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனன் ஆகியோர் உடனடியாக களத்தில் இறங்கி தோட்ட பாட்டாளிகளுக்கு நியாயமான இழப்பீடு பெற்றுத் தர போராடினர்.

இவர்கள் இப்பகுதியில் நீண்ட காலம் வசித்து வருவதால் இவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை மேம்பாட்டாளரிடமிருந்து பெற்றுத் தருவதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இன்று வெற்றி பெற்றது.

இவ்விருவரின் முயற்சியில் காஜாங் நகராண்மைக் கழக பொறியியல் துறை இயக்குநர் இஞ்ஜீனியர் ஹாஜா ஃபாடிலா ரசாலி தலைமையில் மேம்பாட்டு நிறுவனத்துடன் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 40,000 வெள்ளியும் வாடகை வீட்டில் தங்குவதற்கு தலா 10,000 வெள்ளியும் வழங்குவதற்கு போஸ்டட் பாலாவ் மேம்பாட்டு நிறுவனம் ஒப்புக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முருகன், செல்வத்துரை, சக்திவேல், உலக நேசன், செம்பகலிங்கம் ஆகிய பாட்டாளிகள் தலா 50,000 வெள்ளி இழப்பீடு கிடைக்கிறது.

இவர்கள் இன்னமும் இரண்டு மாதத்தில் தங்களது குடியிருப்பை காலி செய்ய வேண்டும்.

மேலும் இந்த இடத்தில் இருக்கும் கோட்டை முனியாண்டி கோவிலுக்கு 15,000 வெள்ளியை இழப்பீடாக வழங்குவதற்கு மேம்பாட்டு நிறுவனம் முன் வந்துள்ளது.

இக்கூட்டத்தில் காஜாங் நகராண்மைக் கழக திட்டமிடல் மேம்பாட்டு துறை இயக்குநர் ஹாஜி ரிடுவான், இக்கழகத்தின் சட்டத் துறை துணை இயக்குனர் நோர்யாத்தி, உலு லங்காட் மாவட்ட மற்றும் நில அலுவலக அமலாக்க பிரிவு அதிகாரி, போஸ்டிட் பாலாவ் நிறுவன திட்டப் பிரிவு நிர்வாகி மேஜர் அட்னான் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
[

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles