குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பராமரிப்பாளரின் மகன் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், ஆக 7– தனது தாயின் பராமரிப்பில் இருந்த 10 மாத குழந்தையை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது மாணவர் ஒருவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஜூலை 31ஆம் தேதி காலை 10.00 மணியளவில் டாங் வாங்கி, ஜாலான் ஹம்சா கம்போங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைச் புரிந்ததாக அம்மாணவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் பிரிவு 14(ஏ) இன் கீழ் அந்த மாணவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை 6,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்க நீதிபதி முகமது காஃப்லி சே அலி அனுமதித்தார். மேலும் வழக்கின் சாட்சிகளை மிரட்ட வேண்டாம் என்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் மாதம் ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles