சமூக ஊடகங்களுக்கான லைசென்ஸ் திட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது!

கூச்சிங், ஆக. 9 – சமூக ஊடகத் தளங்களுக்கு லைசென்ஸ் வழங்கும்
மலேசியாவின் திட்டம் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு இந்த
திட்டத்தை பின்பற்ற அவை ஆர்வம் காட்டியுள்ளன என்று தகவல்
தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இந்த உத்தேசத் திட்ட அமலாக்கம் தொடர்பில் மேலும் அறிந்து
கொள்வதற்காக மலேசிய தகவல் மற்றும் பல்லுடக ஆணையத்தை
தொடர்பு கொண்ட தரப்புகளில் இங்கிலாந்தின் தொடர்பு ஒழுங்குமுறை
அமைப்பும் (ஆஃப்கோம்) ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த லைசென்ஸ் நடைமுறை குறித்து சிங்கப்பூர் அரசும் விபரங்களைக்
கேட்டுள்ளது. எனினும், தங்களின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப அந்நாடுகள்
அமலாக்க வழிமுறைகளைக் கொண்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles