
டெல்லி: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த விளையாட்டில் இறுதி சுற்று வரை வினேஷ் போகத் முன்னேறியிருந்த நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி வினேஷுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
தனது x பக்கத்தில், “வினேஷ் நீங்கள் இந்தியாவின் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் வினேஷ் போகத் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார்.
இந்த பின்னடைவு வேதனை அளிக்கிறது. எனது வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என்று மோடி கூறியுள்ளார்.

