இந்து சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்!

மஞ்சோங், ஆக 12-
பேராக் மஞ்சோங் மாவட்ட இந்து சங்க வட்டார பேரவையின் 46 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழாவில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி திருமுறை செம்மல் தினகரன் கோவிந்தசாமி சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.!

பேரா மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளும் மஞ்சோங் வட்டார பேரவையின், திருமுறை ஓதும் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசிய தினகரன்
அண்மைய காலமாக திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், சமயத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தும் வகையில், ஒரு சில பொறுப்பற்ற செயல் தமக்கு, மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்
இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மாவட்டத்தில் உள்ள 15 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட திருமறை ஓதும் விழா மாவட்ட இந்து சங்கத் தலைவி திருமதி இந்திராணி தலைமையில், மிகச் சிறப்பான முறையில் நடந்தது குறித்து, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தினகரன் இந்த
விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினரின் அரசாங்க மானியத்தில் இருந்து ரிங்கிட் மலேசியா 5000 வழங்கி நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles