

பத்தாங் காலி,ஆக 12-
வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் சரவாக் மாநிலத்தில் சுக்மா போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம் மற்றும் கபடி 9 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்மாவில் இடம் பெற்றுள்ளது.
சிலாங்கூர் மாநிலம் இம்முறை தலைசிறந்த சிலம்ப விளையாட்டு சுக்மா போட்டிக்கு அனுப்புகிறது.
அந்த வகையில் பத்தாங் காலி பண்டார் உத்தாமா சிலம்ப கிளப்பைச் சேர்ந்த சர்வேஷா முரளி மற்றும் ஐஸ்வரியா தேவி ராமநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
50, 60 கிலோ கிராம் தனித்திறமை மற்றும் கோம்பேட் பிரிவில் பங்கேற்கும் இவர்கள் பதக்கம் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
சரவாக் சுக்மா போட்டிக்கு செல்லும் இவர்களை கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாங் சோக் தாவ் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் கோலகுபு பாரு முன்னாள் கிராமத் தலைவர் பாலசந்தர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

