லோட் நிலக் குடியிருப்புகளில் வீடு வீடாகக் குப்பை அகற்றும் திட்டம் – கவுன்சிலர் யோகேஸ்வரி தகவல்

ஷா ஆலம், ஆக. 16 – புக்கிட் கெமுனிங் லோட் நிலக் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக வளாகங்களில் குப்பைகளை அகற்றும் திட்டம் அமல்படுத்தப்படுள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன் கூறினார்.

சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டப்படுவதை தவிர்ப்பதற்கும் புக்கிட் கெமுனிங் சாலை நெடுகிலும் நிலவி வரும் தூய்மைக்கேட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்யும்படி வட்டார மக்கள் அறிவுறுத்தப்படுதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles